Wednesday, August 29, 2007

ல்லாவற்றையும் நிரூபிக்கவேண்டி (இருக்கிறது)
அசிங்க அசிங்கமாய்
தொடைகளின் இடையில் விளக்குப் பிடித்து
சரி பார்க்கும் 'அவர்கள்' சொல்கிற கற்பாய்
காதலாய் -
அரசியலை;
நானோ அவர்களது "நிரூபிக்கிற" கவிதைகளை
தொகுத்துச் சேர்த்துத் தீக்குளிக்கச் செய்தேன்;
கழுவுப்படாத அவற்றின் நாற்றம்
எனது குறிப்புகளில் வந்திருந்தது; நிரந்தர மகிழ்ச்சியாய்.
யாருக்காக இந்த அசிங்க நிரூபிப்புகள்
(

sept 2006

Tuesday, August 28, 2007

எனது இரத்தத்த்தில்


t e s t

Friday, August 24, 2007

முற்றுப் பெறாத கொலைக் குறிப்பு

{ என் வரலாற்றைப் பகிரும் பெண்ணுக்கு }








அதிகாரத்துடன் நடக்கின்ற நூறு ஆண்கள் போல
- அவள் நடந்தாள்
(இது றெஜினா சொன்னது)
*நீங்கள் பார்த்திருப்பீர்கள்
வெற்று அதிகாரமல்ல
சக மனுசருக்காக ஒலித்த நிமிர்வின் வல்லபம்.

பிளவுண்ட எமது சகோதரர்களே
நீங்கள் அறிவீர்கள்
உங்கள் எல்லோருடைய கையிலும் 'அது' இருந்ததை
அவள் 'இருப்பதை' 'எடுக்கிற'
தகுதி யொன்றே அதற்கிருந்ததை
அது பசிகொண்டு
தினவேறிக் குறியென விறைப்பில் எழுந்ததை

எத் திசையுமிருந்து சூழ்ந்த
சாவின் வாசனையை மோந்தபடியே,
அவளைச் சூழவும் கழுகுகள் பறந்ததை
சாட்சியாக மறுத்து
மெளனமான எமது கண்களால்
நாம்
கண்டுகொண்டே இருந்தோம்; கழுகுகளோ
அங்கே நிரந்தரமாய்க் குடியேறின;
யாரையும் குதறாத நேசத்துடன்
புணருகிறபோதோ
எமது ஜோனிச் சதைகளிற்காக
அவை
கூரைகளைப் பெயர்த்தன

நடக்கப் போகிற கொலையைக் காணாது
எமது இமைகள் தாமாய்த் தாழ்ந்து கொள்ள
உங்கட துவக்குகளால் 'எடுக்க' மட்டுமே முடிந்தது
தெருவெங்கும் அந்த ஓலங்கள் தீராத இன்றும்
அவளைப் 'போட்டது' நீங்களில்லை என
ஒவ்வொருவரும் மறுத்துத் தலையை ஆட்டலாம்;
மெளனமாய் இருக்கும் எங்களைப் பொறுப்பாக்கும்
பழியானால் எல்லோருடைய தலைக்குள்ளும் கிடக்கிறது -
நீண்டு இந்த
துவக்குகளைப் போல,
அழிக்கின்ற விசையை
ஒருபோதும் மறக்காமல்.

அழுத்தும் அவ் விசைக்குச் சாய என
வீழ்த்தப்படடவர்கள் விதையாகும் மண்ணில்
'என்னிடம் அழுவதற்கு இனிமேல் கண்ணீர் இல்லை அக்கா"
என்ற தன் சகோதரியின் குமுறலைச் சுமந்து
சைக்கிளில் அவள் ஓடிக் கொண்டே இருக்கிறாள்
உங்கள் காலங்களின் முன்னால்
எஞ்சிய சிறு நம்பிக்கையாய்!
எதிர்ப்படும் நீங்கள் - அதை
பாழுங் கிணற்றில் கொன்று போடலாம்
ஓர் குண்டொன்றினால் சுட்டு வீழ்த்தலாம்
அதுவரை அவள் ஓடிக் கொண்டிருப்பாள்
உந்தத் துரத்தல்கள் தொடர - சூழ்ச்சிகள் நெருங்கவியலா
தன் வல்லபத்துடன்
தன் நமிர்வுடன்
ஒருபோதும் குழந்தைகளை வேட்டையாடியறியா
ஆதித் தாயின் அதிர்வுடன்
- நீங்கள் கண்டிருப்பீர்கள்
(
பெப்.-ஏப்ரல் 2007

*நேற்றிவ் பாடகி பஃபீ செயின்ற் மேரியின் starwalker பாடல் வரிகளது பெண்: Wolf Rider she's a friend of yours/ You've seen her opening doors/ She's a history turner