
Potrait of a girl who looking Up (Monaragala, சிறீலங்கா)
Monday, July 7, 2008
சமாதானத்தின் முகம்...
எழுதியது
kaya / மற்றவர்கள்
.நேரம்
7:12:00 PM
0
கருத்துக்கள்
பதிவிற்கான சுட்டிகள்
வளப்பி யோகா
{நீதி: வரலாறு திகதிகளை நினைவு வைத்திருக்கும்;
மனுசரையல்ல}
உனது தகப்பனை '77 இனப்படுகொலை கொன்றது
தகப்பனைக் கொன்று பிறந்த பிள்ளை - உன்னை
ஒரு நிலப்பிரபுத்துவக் குடும்பத்திடம் தந்தனர்;
உனது இரண்டாவது அப்பர் நேசமாய் இருந்தார்...
உனது இரண்டாவது தாயோ
வளர வளர
ஊர்வாய் கேட்டு
வசைகளாற் சாத்தினாள்:
வளப்பி!
தோறை!
தோட்டாக்காட்டாள் மகள்
வெளியில்
மாப்பிள்ளை பிடிக்கப் போனாயோடி
வேசை ? !
உன் வேர்களைத் தேடிச் செல்ல
உனக்கு நேரந் தரப்பட்டிருந்ததில்லை
திட்டியதாற்
'கோவித்துக் கொண்டு'
இயக்கத்துக்கு ஓடினாய்;
காயப்பட்டு
தலைமுடி குட்டையாய்
'ஊர்வாய் பேச'த் திரும்பி வந்து;
திருமணம் முடிந்து,
கணவன் இறந்து;
மறுமணம் முடித்து;
நாலு பெண் குட்டிகளின் தாயானாய்.
யோகா,
வேர்களைத் தேட
உனக்கு வழியிருந்திருக்கவில்லை
'தரப்பட்ட' வாழ்க்கையை
ஓட்டிச் செல்தலே
உன்னால் முடிந்தது
மலையகத்தில் உன் தாய் பாடும் பாடல்கள்
கறுப்பின் அழகு படர்ந்த புன்னகைக்கு சாயல் தந்தன
உன்மேற் பிரியமான அக்காவின் மகளாய்
நான்
பாரபட்சங்கள் ஆள்கிற
என், உன், /நம்(?)
வேர்களைத் தேடி உன்னிடம் மீண்டேன்;
வரும் வழியில்
பாதம் பட்ட பாத்திகள்,
துர்க்கையம்மன் கோவிற் பாலம்,
வீடு திரும்பாது
திருவெம்பாவைக் கூத்தை
'ரா'ராவாய் விழித்திருந்து
உன்னுடன் சேர்ந்து பார்த்துக்
களித்த சிறுமியாய் - என்றோ
உன்னைப் பற்றிக் கோழ்மூட்டியபடி
ஓடி,
பிரியத்துடன்
உன்னை வெறுப்பேற்ற
நீ எட்டிப் பிடிக்காத தொலைவில்
(ஓடத் தயராய்) நின்று
அழகுகாட்டிக் கத்துவேன்
"கறுப்பீஈஈஈ..."
\
2007
1977 இனப்படுகொலை: ஐக்கியதேசிய கட்சி ஆட்சிக்கு வந்த பிறகான சிறுபான்மைத் தமிழர்களை இலக்கு வைத்து கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறையில் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் கொல்லப் பட்டதாக கூறப்படுகிறது.
எழுதியது
kaya / மற்றவர்கள்
.நேரம்
2:19:00 PM
0
கருத்துக்கள்
பதிவிற்கான சுட்டிகள்
Labels: KAYA / க.யசோதர
Subscribe to:
Posts (Atom)

