Saturday, August 30, 2008

ஹிரோசீமா-வை நிகழ்த்து..தல் ( மீண்டும் மீண்டும் )

[o.. come to me, Hiroshima]

how do u kiss – a memorable kiss – the man in wheelchair? ? how do you take his wetness & smell inside you, like you once wanted to take his penis inside you? How do you leave him & but still take him? a piece of him. Leave the place, him, but take the existence of him – to feel, to remember, to ……
6:30 p.m., வைகாசி '07, Nevers[நெ(வ்)வேர்]

01
ஒரே ஒரு வானத்தில்
எத்தனை கனவுகளை எழுத நான் ?
இவ் வலியும் தவிப்பும்
உனக்குப் புரிகிறதா..


நெவ்வேர்...
சுவர்கள் நெருக்குற நிலவறையில்
பூட்டி வைக்கப்பட்டிருக்க;
அவளது காதை அடைக்கிற La Marseillaise
போரினில் அவரது 'வெற்றி'யை அறிவித்து
என்னையும் நெருங்குகிறது, மெல்ல.
அதை மறுதலிக்கையில்
வசவுகள் தருகிற தாழ்வுணர்தலாய்
என்னுடன்
காமம் வெறுமையில் அழிய
அவள் நெவ்வேர்
அவன் ஹீரோசீமா

சாகும்வரைத் தழுவியிருந்த
அவ் ஜேர்மானிய சிப்பாய்
அவளைத் தேசத் துரோகியாக்கி
பிறகோ
என்றென்றைக்குமாய்
இல்லாது போயிட்ட ஆரம்ப நேசகன்;
விசரியாய்
வெளிச்சமற்ற நிலவறைக்குள்
அவளை உறையச் செய்தவன்...
சீவன் தனித்து
அடைத்து வைக்கப்பட்டிருந்த அவ் அறையினுள்
கைகளைப் பிராண்டி
தன் ரத்தத்தைத் தின்றபோதில் சொன்னாளோ அவள்!
**I loved the taste of blood since I tasted yours
நான் ரத்தத்தின் சுவையை விரும்பினேன்,
உன் ரத்தத்தைத் ருசித்திருந்ததால்...
மேட்டிலிருந்து
கீழ் நோக்கிப் பிரியும் குறுக்கொழுங்கைகளில்
சைக்கிளில்
கைகளை விரித்து
இளமையைக் கூக்கிரலிட்டு அழைத்து
ஒதுக்குப் புற பண்ணை வீடுகள் நோக்கி
அவனைச் சந்திக்க ஓடிய நினைவினை
வந்தடைந்தது மெளனம்,
மடியினில் கிடந்தவனது
இராணுவ உடையிருந்த ரத்த்தமென...
நான் நெவ்வேர்
நீ ஹிரோசீமா02
திரையில்:
அணுகுண்டுகளால் உருவான சாம்பர்
காதலுக்காய் பசியுற்ற
உடல்களின் மேலே விழுந்து
நீத்தவர் புதைகுழிகளை மூடுகின்றன;
கறுப்பு வெள்ளைத் திரையில்
கமரா Atomic Tour பஸ்-இன் பின்னே
நகருகையில்; அஃது திரும்பும்,
வளைவுகளில்
நடந்திராத
கடைத் தெருவுகள் கடக்கையில்;
சாம்பல் அகன்று
புணரும் அவர்களது உடல்கள் வெளிக்கையில் -
அவள் சொல்லுவாள்:
**...i meet you
i remember you.
This city was made to the size of love.
You were made to the size of my body.
Who are you?
You destroy me.
I was hungry. Hungry for infidelity, for adultery, for lies,
hungry to die.
I always have been.
I always expected that one day you would descend on me.
i waited for you calmly, with infinite patience.
Take me. Deform me to your likeness so that no one, after you, can understand the reason for so much desire.
We're going to remain alone, my love.
The night will never end.
The sun wll never rise again on anyone.
Never. Never more. At last.
You destroy me.
You're so good to me.
In good conscience, with good will, we'll mourn the departed day.
we'll have nothing else to do, nothing but to mourn the departed day.
And a time is going to come.
A time will come. When we'll no more know what thing it is that binds us. By slow degrees the word will fade from our memory.
Then it will disapper altogether.
[pg. 77]
[காதலின் அளவுக்கமைய செய்யப் பட்டிருக்கிறது இந் நகர்
என் உடலுக்கமையச் செய்யப் பட்டிருக்கிறாய் நீ
யார் நீ?
நீ என்னை அழிக்கிறாய்.
பசித்திருந்தேன் நான்.
விசுவாசமின்மைக்கும், தவறான உறவுக்கும்,
பொய்களுக்கும்
சாவுக்கும் பசித்திருந்தேன் நான்.
எப்போதுமே அவ்வாறுதான்.
நீ என்னுள் இறங்கும் ஒரு நாளுக்காய்ப் பார்த்திருந்தேன்
முடிவற்ற பொறுமையோடு நிதானம் மிக உனக்காய்க் காத்திருந்தேன் .
என்னை எடுத்துக் கொள். உன்னைப்போல என்னைச் சிதை, ஆகவே உனக்குப் பிறகு யாருமே இப் பெரும் வேட்கையின் காரணத்தை அறியவியலாத படிக்கு.
நாம் தொடர்ந்தும் தனித்திருக்கவே போகிறோம், அன்ப.
இவ் இரவு ஒருபோதும் முற்றுப் பெறாது.
யாரின் மீதும் சூரியன் உதியாது இனிமேல்.
ஒருபோதும். இனி ஒருபோதும். ஈற்றாய் (இல்லை).
நீ என்னை அழிக்கின்றாய்.
நீ எனக்கு உரியவன்.

மிக நனவாக, மிகத் திடமாக, பிரிவு நாளில் நாம் துயரை அனுஸ்டிப்போம்.
அப்போ, எங்களுக்கு வேறெதுவும் செய்ய இருக்காது, பிரிகிற நாளுக்காக வருந்துவரைத் தவிர...
அதுக்கான சமயமும் வரத்தான் போகிறது.
குறித்த நேரம் வரும். எங்களைப் பிணைத்திருப்பது என்னவென நாமறியாது போகும் போதில். சிறிது சிறிதாக அச் சொல் எம் நினைவிருந்து மறைந்து போகும்.
பின்னர் முற்றாக அது மறையும்].


03
இதில்....
மாறுபட்ட எதையும் நானும் விரும்பேன்

"நீ" என்ற வொன்றை
வழிவழியே உணருவதற்கு
எடுத்துச்செல்ல வியலாதவளாய்
உன்னிடம் நான் 'இல்லாது'போன பிறவு
எதை வேண்டி வேணாலும் பேசு,
தொலைவாங்கியை காதினிற் தாங்கி
தொலைஅழைப்பிற் சொற்கள்
செரியாய்க் கேட்காதெனினும் -
மிகக் கிட்டவாய், காதினுள்
அமத்தி அழுத்திக் கேட்டிருந்த
ஆசைக் குரலினில்தொடர்ந்து.
உன்னதக் காதல், புரட்சிகர உறவு...
மரபின் துருவேறிய 'ஒருபோதைய' மனம்
உனக்காய் காத்திருந்த நாட்களிற்
தைத்த, பெண்குறியின், தையல் அவிழ்த் தெறிந்து
உறவின் வன்முறையை தூற்ற

உன்னால் அனுப்பப்படும்
அழகியதழகிய சொற்கள்
என்னிடம் சாவையே பாடின ( பிறகு,
இணைப்பு செத்த பிறவு
)
நீலம் பாரித்த,
சிப்பாயின் அச் செத்த, துரோக உதடுகளாய்
என்னால்/என்னைத் தீண்டவியலாதபடிக்கு; உன் தொடுகை வேண்டி கிளரும் உணர்வெழுத புதிய குழந்தையாய்ச் சொற்களைத் தேடியும் அவற்றினை அடையவியலாது போயும்.
ஓ... என்னிடம் வா ஹிரோசீமா
நெவ்வேரில் காத்திருந்த வெற்றிடத்தை நிரப்பு.
பயித்தியக்காரியாய் மூடிய அறையினுள்
என் ஓலத்தினை நினைவூட்டும்
இந்த இரவை முடி;
துவக்கின் விசையால் முடிக்கப்பட்ட உயிராய்
கருவறையை நிறைத்து விட்டு
ஒரு பருவத்தின் கதவை
கர்ணகொடூரமாய் சாத்திச் சென்ற
ஆரம்பக் காதலனாய்த்
தொக்கி நிற்கத் தடையாயி
நினைவுகளை அழித்து,
இக் கொடும் இரவினை முடித்துச் செல்.

அப்புறமாய்
நியாயங்களைப் பழித்து
உன் மடியினில் செத்துக் கிடக்கும்
- எதிர்வற்ற -
நானற்ற ஒன்றைப் பார்த்திருத்தலின்
வலி உணரப்
பேசு என்னுடன்.

அதுக்காய்
என்னிடம் வா ஹிரோசீமா...
"
"


___________
மே '07 - மார்ச் '08
**Hiroshima mon amour (1959) திரைப்படத்திலிருந்து எடுக்கப்பட்ட வசனங்கள். நேசமும் மனிதமும் மிகும் உரையாடல்களால் ஆனது இம் முழுத் திரைப்படமும். பிரெஞ்சுமொழியில் வெளிவந்த இது French New Wave சினிமா வகைப்பாட்டுள் வருவது.
*La Marseillaise - பிரான்ஸ் தேசிய கீதம்

Wednesday, August 20, 2008

துண்டிக்கப்பட்ட சொற்கள்


01

தோல்வியின் வர்ணிப்பு நிரம்பிய
உனது குரல்
எனக்குக் கேட்க வேண்டாம்

துண்டிக்கப்பட்ட
தொலைபேசிகளிலிருந்து
எனது நகரத்தின்
கண்ணீர் வடிகிறது

கம்பிகளின் ஊடாய்
புறப்பட முயன்ற
எனது சொற்கள்
தவறி விழுகின்றன

மேலும்
தோல்வி வருணிக்கப்பட்டு வரும்
உனது குரல்
எனக்குக் கேட்க வேண்டாம்.

02
உனது கடிதம்
வந்து
சேராமலிருந்திருக்கலாம்
நீ
எந்தக் கடிதத்தையுமே
எழுதாமல் விட்டிருக்கலாம்

தபாலுறை
நாலாய்க் கிழிந்திருந்தது
முகவரிகளில்
இராணுவம் முன்னேறிய
குறியீடுகள் இருந்தன

நான் தேடி அலைந்தேன்
கடிதம் எங்கும்
வெட்டி மறைக்கப்பட்டிருந்த
உன்னையும்
உனது சொற்களையும்.

மறைக்கப்பட்டிருந்த
உனது சொற்களுக்கு கீழாய்
உனது முகம் நசிந்து கிடக்க
தோல்வி வருணிக்கப்பட்டிருந்தது.

______________________________
தீபச்செல்வன்
நன்றி: தீபம்.இணையம்
photo