இன்று இவனைக் கொல்லலாமென
உமக்குத் தோன்றியது
இவன் XX அல்ல
இவன் XXXX-உம் அல்ல
இவன் இன்ன பிறன் அல்ல.
ஓர் அரசூழியன் என்ற வகையிலும்
உங்களுக்கு "பிரச்சினை"யாய்
இருக்கக் கூடியவனும் அல்ல
அரசியலேதுமற்று
"அநியாயத்துக்கு" அப்பாவியாய்
இருந்தும்
ஓர் தோட்டாவை போட்டுவிட்டால்
அவன் "கதைப்பதை"
கேட்கவேண்டியதில்லை என்று நினைத்திருப்பீர்களோ.
2006-ஆம் வருடம்
தோராயமாய் 27 ஆண்டுகளிற்குப் பிறகு
ஒரு விரல் சொடுக்குள்
ஒருவனைக் கொல்லும் கலையை மட்டும்
வளர்த்து வைத்து நிற்கிறீர்களே
வளர்த்து வைத்து நிற்கிறீர்களே
KAYA
Thursday, December 28, 2006
எங்களின் எசமான்களே...
எழுதியது kaya / மற்றவர்கள் .நேரம் 1:26:00 AM
Labels: KAYA / க.யசோதர
Subscribe to:
Post Comments (Atom)
3 கருத்துக்கள்:
அர்த்தமுள்ள கவிதை.
சம்பந்தப்பட்ட ஒருவர் படித்தால் கூட உங்கள் கவிதையின் பலன் கிட்டியது.
-
யாழினி அத்தன்
நன்றி யாழினி அத்தன்...
இன்று-இவனைக்-கொல்லலா-மென
உமக்குத் தோன்றியது
இவன் X அல்ல
இவன் XX-உம் அல்ல
இவன் இன்ன பிறன் அல்ல.
ஓர் அரசூழியன் என்ற வகையிலும்
உங்களுக்கு "பிரச்சினை"யாய்
இருக்கக் கூடியவனும் அல்ல
அரசியலேதுமற்று
"அநியாயத்துக்கு"
அப்பாவியாய் இருந்தும்
ஓர் தோட்டாவை போட்டுவிட்டால்
அவன் "கதைப்பதை"
கேட்கவேண்டியதில்லை என்று நினைத்திருப்பீர்களோ.
2006-ஆம் வருடம்
தோராயமாய் 27 ஆண்டுகளிற்குப் பிறகு
ஒரு விரல் சொடுக்குள்
ஒருவனைக் கொல்லும் கலையை மட்டும்
வளர்த்து வைத்து நிற்கிறீர்களே
வளர்த்து வைத்து நிற்கிறீர்களே
Post a Comment