Friday, February 16, 2007

தலைப்பிடாத கவிதை

- ஆகர்ஷியா

நீ என்னை நினைவு கூர்ந்தாய்
பாடல்களோ
பருவங்களைச் சுவீகரித்துள்ளன
ஓயாமல் முழங்கிப் பெய்த
பருவ மழையில்
கொப்புங் குடலுமாய்ச்
சாய்ந்தன மரங்கள்.

பனித்துண்டுகள் நெறு நெறுக்க
நீ சாவதானமாய்
நடந்து செல்வாய்
* உப்போடையோரம்
புதிதாய்ப் பூத்தது மயானம்
* நடுக் கூடத்தில்
துண்டமாகினாள்
என் தோழி.

மாலைத் தேனீரின் சுவையை
நீ ஆழ்ந்து ரசிப்பாய்
நண்பனே
என்னை நினைத்திருக்க
ஆயிரங்காரணங்கள் உனக்கிருப்பது போல
உன்னை நினையாதிருக்கப்
பல்லாயிரங் காரணங்களாய்
என் வாழ்க்கை !
%
(மூன்றாவது மனிதன்)


* செம்மணி
* திருநெல்வேலியில் ஒரு சம்பவம்

நன்றியுடன் நூலகத்திலிருந்து மறுபிரசுரம் செய்யப்படுகிறது..

0 கருத்துக்கள்: