Monday, March 5, 2007

வெளிச்சக்கூடுகள் தேவைப்படுவோர் படிக்க வேண்டிய குறிப்புகள்…


அகதி வாழ்வில்
அருவருப்பொன்றும்
அவ்வளவாயிருந்ததில்லை
வாயுள் சலங்கழித்த
சமாதானச்சிப்பாயின் மூத்திரப்போக்கியை
கடித்தெடுக்க முடியாத
இயலாமையை விட….

--காருண்யன்

வெளிச்சக்கூடுகள் தேவைப்படுவோர் படிக்க வேண்டிய குறிப்புகள்…

நான் தீபன் ராஜ் மூண்டு பேரும் ஒரு செட். நாவல் பழம் புடுங்க முனியப்பர் கோவில் காட்டுக்கு போறதிலயிருந்து பள்ளிக்கூடம் போய் வாறது வரை எங்களை யாரும் தனித்தனியாப் பாக்கேலா அவ்வளவு ஒட்டு. நாங்கள் செய்யுற குறளி விஷயங்கள் கனக்க இருக்கு. கெட்டப்போலால தியாகண்ணை வீட்டு மாமரத்தில மாங்காய் அடிக்கிறது வீட்டில சொல்லாமக் கொள்ளாம நீச்சல் பழகிறது பேப்பர் ரொக்கட் செய்து ரோட்டில போற வாற ஆக்களுக்கெல்லாம் விடுறது எண்டு நிறைய. ஆனா அதெல்லாத்ததையும் விட போன வருசம் நாங்கள் தெரிஞ்சு கொண்ட விசயம் சூப்பரான ஒண்டு.
போன வருசம் நாங்கள் ஆறாம் ஆண்டில இருந்தம். நாங்கள் முதலாம் ஆண்டு படிக்கேக்கை தான் ஆமி மாமாக்கள் எங்கடை ஊரை பிடிச்சவை. தீபன் வீட்டுக்கு முன்னால இருக்கிற யோகமன்ரி வீட்டை வைபோசா எடுத்து சென்ரிப் பொயின்ற் ஒண்டும் போட்டிட்டினம். கிட்டடியில கூட யோகமன்ரி சித்திராக்காவுக்கு கலியாணம் தள்ளிப் போகுது, சீதனம் குடுக்க வீடும் காணியும் வேணுமெண்டு ஆமிப் பெரியவரிட்ட கடிதம் குடுத்தவா.
ஆமி மாமாக்கள் வந்த புதிசிலை அவையின்ர தொப்பியளையும் துவக்குகளையும் கண்டு நாயள் வெருண்டது போலவே நாங்களும் பயப்பிட்டுப் போனம் - ஆனால் - போகப் போகப் பழகிற்றுது. காலமையில ரோந்து போகேக்க எங்களைப் பாத்து சிரிப்பினம். ஆமி மாமாக்கள் கன்ரீன் ஒண்டையும் இப்ப திறந்து போட்டினம். இப்பெல்லாம் அவையக் கண்டா நாயள் மாத்திரம் குலைக்கும்.
தீபன்ட அம்மா தூரத்து ஊரொண்டில ரீச்சராயும் அப்பா வீ.சீ கிளாக்காயும் இருக்கினம். என்ர அப்பாவும் தீபன்ட அப்பாவும் வெளி நாட்டில இருக்கினம். என்ர அம்மா லைபிறறியனா இருக்கிறா.
நான் ஆறாமாண்டுக்கு வந்த புதிசில பயப்பிடாம இருக்க காட்டித்தந்தது தீபன் தான். ஆனா கொஞ்ச காலத்திலேயே அவன் என்னை விட்டு பிரிஞ்சு போற மாதிரி - அதான் படங்கள்ல வருமே அது போல- இருந்துது.
தீபன்ட அம்மா சுயிங்கம் சாப்பிட விடுறேல்லை ஆனா அவன் நிறய சுயிங்க ஸ்டிக்கர் வைச்சிருந்தான். அதயெல்லாம் காட்டி சேட் கொலர தூக்கி
ண் காட்டுவான். போதாக்குறைக்கு முந்தின மாதிரி பட்டமேத்தவோ கெந்திதட்டு விளையாடவோ அவன் வாறேல்லை. முந்திரியம்பழம் ஆயக்கூட வாறேல்லை. எனக்குச் சரியான கவலையாவும் எரிச்சலாவும் இருந்துது. இவனிட்ட கண்ணக் கட்டி கோபம் போட்டா அன்டனி, ஜீட் ஆக்களோட தான் பழக வேணும். அவங்களோட கூட்டு சேந்தா அணில் முயல் வளக்கிறது சிப்பி சோகி சேர்க்கிறது எண்டு சந்தோஷமா இருக்கலாம். ஆனா தீபன் வீட்டில போய் அண்டிக்குடுத்தானெண்டால் திரும்ப மஞ்சள் தண்ணியும் உப்பு பிரம்பும் தான். கோபமா நேசமா எண்டு விரல் நீட்டினா நேசம் எண்டு தான் சொல்லுறான். ஆனா கதைக்க வேணுமெண்ட அவற்ற கெண்டிசனுகளுக்கு ஒப்ப வெணுமாம். அவருக்கு நான் ஏழு வயசு குறச்சலாம் அவருக்கு சிங்களம் தெரியுமாம் (எக்காய் தெக்காய் துனாய் கத்தா கறண்ட எப்பா) எனக்குத் தெரியாதாம்.அதால மரியாதை தர வேணுமாம்.
எனக்கு எரிச்சல் எரிச்சலா வந்துது.ஆனா எனக்கும் சிங்களம் படிக்க விருப்பம்.அப்ப தானே இவனை மடக்கலாம்.எரிச்சலை அடக்கிக்கொண்டு எங்க தீபண்னா சிங்களம் படிச்சனீங்கள் எண்டு மரியாதயாக் கேட்டன்.நான் அண்ணை போட்டகொண்ண ஆளுக்குப் புளுகம் தலைக்கேறிப்போட்டுது. சனிக்கிழமை தன்ர வீட்ட வந்தா எல்லாம் சொல்லுறதா சொல்லீற்றுப் போயிற்றான்.
சனிக்கிழமையண்டு அவன்ட வீட்ட போனன். தீபன் எண்டு கூப்பிட உன்னின நாக்கை அடக்கி "தீபனண்ணா" எண்டு கூப்பிட்டன். "கேட் திறந்து தான் கிடக்கு திறந்து கொண்டு வா " எண்டு பதில் வந்துது.கேட் கிறீச் சத்தம் போட எனக்கு பயம் பயமா வந்துது. தீபன் வாசல்ல ஒரு மாதிரியா சிரிச்சுக்கொண்டு நிண்டான்.உள்ள கூட்டிக்கொண்டு போய் கொம்பாசுக்குள்ளால நூறு ரூவாய்த் தாள் எடுத்துக் காட்டினான்.பிறகு விளயாட்டுத் துவக்கு கண்டோஸ் மின்னி எண்டு கனக்க காட்டினான். நான் எல்லாத்தையும் ஆவெண்டு பாத்துக்கொண்டிருந்தன். அன்ரி கண்டாலும் எண்ட பயத்தில எல்லாத்தயும் ஒளிக்கச் சொன்னன். அவன் அப்பாவும் அம்மாவும் யாழ்ப்பாணம் போயிற்றினம் எண்டும் மத்தியானச் சாப்பாடு பாண் தான் எண்டும் சொன்னனான்.
"எங்காலயடா தீபன் உனக்கு இவ்வளவு சாமான்?" எனக்குத் தெரிஞ்சு கிட்டடியில வெளிநாட்டுச் சொந்தக்காரர் ஒருத்தரும் வரேல்லை.
முறைத்தான். 'போடா...
புcensored."
''அன்ரி தீபன் தூஷணம் கொட்டுறான்" தீபன் கோள்மூட்டி எண்டு திட்டி தலயில குட்டினான். வீட்டில ஆருமில்லை எண்டது திரும்பவும் ஒருக்கா விளங்கிச்சுது.கண் எல்லாம் கலங்கி சொண்டு துடிக்கிறதப் பாத்து தீபன் சமாதானமா இறங்கி வந்து 'சரி இனிமெ இப்பிடி அண்டிப் பழகாத' எண்டான்.
கொஞ்ச நேரம் பேசாமல் இருந்த்தான்.பிறகு உள்ள போய் மயிலிறகு கொண்டு வந்து தான் சொல்லப்போறதை ஆருக்கும் சொல்லக்கூடா எண்டு சத்தியம் வாங்கினான். பிறகும் அவன் பேசாமலே இருந்தான். என்னைப் பாத்துக்கொண்டே அங்கயும் இங்கயுமா நடந்தான். பிறகு ஒரு நமுட்டுச் சிரிப்புச் சிரிச்ச படி கிட்ட வந்து
"நீ ஐஞ்சு ரூவாய்ச் சூப்புத்தடி வாங்கிச் சாப்பிடுறனியெல்லே........'
"ஒமோம் அதுக்கென்ன"
"அதுமாதிரி.....அதுமாதிரி...ஆமி மாமாக்களின்ர
குஞ்censored சூப்பி விட்டா...இவளவும் கிடைக்கும்"
எனக்குப் பெரிய புதினமாய்க் கிடந்துது. ஆனா அருக்குளிக்கிற மாதிரி முகத்தை வைச்சுக்கொண்டு "ச்சீ! மூத்திரம்" எண்டு சொன்னன்.
"இல்லையடா மடையா!.. சின்னப்பிள்ளை மாரிக் கதைக்கிறாய். ஆமி மாமாக்களின்ர மணி எங்கட மாதிரியில்லை. அது பெரிசு ..இதரைப் பழமளவு இருக்கும் . அதைச் சுத்தி மயிரெல்லாம் இருக்கும் மூத்திரமெல்லாம் வராது."
எனக்கு அந்த வித்தியாசத்தப் பாக்க வேணும் போல கிடந்துது. அதெப்பிடி.. இவன் புருடா விடுற ஆள்த் தானே. அதில மாத்திரம் ஆள் விண்ணன்.
'பொய் சொல்லாதடா..'எண்டு கத்தினன்.
'டா' போட்டத இப்ப அவன் பெரிசு படுத்திற மாரித் தெரியேல்லை.
'நீ வேணுமெண்டா ஜான் அண்ணையக் கேட்டுப்பார். அவரும் சென்ரிக்குப் போறவர். அவர் சொல்றார் அதுக்குப் பேர் குஞ்சாமணி இல்லயாம் உண்மையான பேர் சுண்censored"
'அரியண்டமாயிருக்காதோ?" நான் மெல்லிய குரல்ல கேட்டன்.
'முதல்ல அப்பிடித் தான்.. சூப்பச் சொல்லி பண்டா மாமா வெருட்டினவர்.துவக்கால சுடுவம் எண்டு கூட ஒரு மாமா சொன்னவர்.ஆனா பிறகு அப்பிடியில்லை. எனக்கும் உம்மை மாதிரி ஒரு மல்லி இருக்கு எண்டு சொல்லி கொஞ்சுவார் - அப்பா மீசை குத்தக் குத்தக் கொஞ்சுவாரே அப்பிடி நல்லா இருக்கும். சரியாக் கூசும். சிங்களம் சொல்லித் தருவார். என்னட்டத் தான் அவர் தமிழ் படிக்கிறவர். கன்ரீன் ரொபியள் எல்லாம் எனக்குத் தான்.'
தீபன் சொல்லச் சொல்ல எ
ங்கும் சரியான விருப்பம் வந்துது. எவ்வளவு நல்லாயிருக்கும் சுயிங்கம் ஸ்டிக்கர் ரொபி நூறு ரூவாய்த்தாள்...........ஒருக்காப் போய்ப் பாப்பம்.
பதினொரு மணியப்பிடி தீபன் ரோட்டடிக்குப் போய் தெரிஞ்ச முகங்கள் நடமாடுதோ எண்டு ரெக்கி பாத்தான். ஒருத்தரும் இல்லாத ஊட்டில சடாஸெண்டு பொயின்ற்றுக்குள்ள போட்டான் - என்னையும் இழுத்துக்கொண்டு. நான் முழி முழியெண்டு முழிச்சுக்கொண்டு நிண்டன். ஆமிக்கார மாமா என்னை ஆரெண்டு தீபனிட்ட கேட்டிச்சினம். 'தீபன் மை பிரெண்ட்' எண்டு இங்கிலிசு பேசினான். ஆமி மாமா என்ர கொட்டயப் பிடிச்சு நசிச்சு ''ஆ! குண்டு பொம்." எண்டார். தீபனும் மற்ற மாமாவும் விழுந்து விழுந்து சிரிச்சினம். தீபன் அவரை பண்டா அங்கிள் எண்டு கூப்பிடச் சொன்னான். பண்டா மாமா அதில நிண்ட இன்னொரு மாமாட்ட என்னமோ சொல்லிட்டு எங்கள் இரண்டு பேரையும் பங்கருக்க கூட்டிப்போனார். தீபன் சொன்னது மாதிரியே அவற்ற
குcensored வாழைப்பழம் மாதிரிப் பெரிசு தான். ஆனா அவற்ர நிறம் சிவப்பு ஏன் மணி மட்டும் கறுப்பு எண்டது தான் எனக்குப் பெரிய சந்தேகம். அதின்ர மணம் எனக்குப் பிடிக்கவே இல்லை. மாமா கொஞ்சினது தடவினது எல்லாம் நல்லா இருந்துது. ஆனா கடைசியா மணியிலேர்ந்து வந்தது தான் எனக்குப் பிடிக்கேல்லை.உண்மையாவே அரியண்டமா இருந்துது. துப்பிப் போட்டன். பண்டா மாமா கன்னத்தில தட்டிச் சிரிச்சுப் போட்டு ஒதுக்கப் போய் சூச்சா விட்டார். எனக்கு ஒங்காளம் ஒங்காளமா வந்துது. தீபனப் பாத்து நெருமினன். 'என்னடா இது மூக்குச் சளி மாதிரி.....ச்சீ..!' அவன் தனக்கும் முதல்ல இது போலத்தான் இருந்தது எண்டு சமாதானம் சொன்னான். எனக்கு அழுகை அழுகையா வந்துது. ஆனா ஆமி மாமா ஐஸ்கிறீமுக்கு காசு தந்தகொண்ண கோபமெல்லாம் காணாமப் போட்டுது.
இதுக்குப் பிறகு கிழமையில இரண்டு மூண்டு தரம் நான் சென்ற்றிக்குப் போகத் தொடங்கீட்டன். ஒரு நாள் பண்டா மாமா சிங்களத்தில என்ர பேரை எழுதித்தந்தார். வகுப்பில அத்தனை பேருக்கும் காட்டி சேட் கொலரைத் தூக்கி விட்டன். தீபனை விட நான் நல்ல பாஸ்ராவே சிங்களம் படிச்சிட்டன். பண்டா மாமா சில நேரம்தான் சூப்பச் சொல்லுவார். பிறகு சின்னப்பிள்ளயள் தமிழ்கதைக்கிற ஸ்ரைல்ல கதை சொல்லுவார். மடியில ஏத்திவச்சு முள்ளுத் தாடியால உரஞ்சி உரஞ்சி சிரிப்பார். பிறகு பேசாமல் இருப்பார். ஒருக்கா கட்டிப் பிடிச்சு அழுதவர். அவர் சொல்லித்தந்த பாட்டுப் போல எங்கட மிஸ்ஸும் ஒரு பாட்டுச் சொல்லித்தந்தவா - குருவிக் குஞ்சே குருவிக் குஞ்சே எங்கே போகிறாய்.... நான் சிங்களப் பாட்டை தமிழில கொப்பின்ர பின்பக்கம் எழுதி வச்சிருந்தன்,

குருளுப் பஞ்சோ குருளுப் பஞ்சோ
கோய்பத யன்னே..
கொட்டல கொட்டல தான்ய கபலி
கன்னட்ட யன்னே.

புஞ்சிலன் பட்டியோ புஞ்சிலன் பட்டியோ
கொய்பத யன்னே
கொந்தட்ட இதுனு அம்பக்கொட்டியக்
கன்னட்டயன்னே

எலுபட்டியோ எலுபட்டியோ
கோய் பதயன்னே
நுக கொல கலாத்துறுன்
கன்னட்ட யன்னே


புஞ்சி பபோ புஞ்சி பபோ
கொய்பத யன்னே
ஸ்கோலட்டக் கொஸ்பாட கிய
கரனட்ட யன்னெ

*
நானும் தீபனும் இதயெல்லாம் ராஜிட்ட சொல்ல அவன் கள்ளச் சிரிப்புச் சிரிச்சுக் கொண்டே கிணத்தடிக்கு குளிக்க வாற ஆமி மாமாக்கள் பற்றிச் சொன்னான். அசுகிடாக் கள்ளன்.
நிறய விளையாட்டுச் சமான்கள் ரொபியள் கண்டோசுகள். எங்களுக்குச் சரியான சந்தோஷம்.
ஆமி மாமாக்கள் ஜான் அண்ணாவுக்கு நிறய வீடியோ கொப்பியள் குடுத்திச்சினம். ஜானண்ணா அதயெல்லாம் எங்களுக்கும் போட்டுக் காட்டினான். ஆம்பிளயளும் பெம்பிளயளும் உரிஞ்சாங் குண்டியோட வருவினம். அவை செய்யுற ஒவ்வொண்டுக்கும் ஜானண்ணா பேர் சொல்லித் தந்தான். அவனோட ஓ.எல் படிக்கிற அண்ணை மாரும் வந்திருந்து படம் பாக்கிறவை. அந்தப் படங்கள்ல வாற மாதிரி ஜானண்ணா ஒருநாள் ஆட்டிக் காட்டினான். எங்களுக்கு அது ஏலாமப் போட்டுது. நாங்கள் சாமத்தியப் படேல்லை எண்டு எல்லாருஞ் சேந்து நக்கலடிச்சாங்கள்.
எங்களுக்கு கோபம் கோபமா வந்துது. ஆமிக்கார மாமாட்டப் போய் அவனச் சுடச் சொன்னம். ஆமி மாமா சிரிச்சிட்டு எல்லாருக்கும் சுயிங்கம் தந்தார். அவர்லயும் எங்களுக்கு கோபம்.
இந்தக் கோபம் பண்டா மாமா வெளிச்சக் கூடுகளைத் தந்த கொண்ண எந்தப் பக்கமா போச்சுது எண்டே தெரியேல்லை. வெள்ளை நிறத்தில நல்ல வடிவான வெளிச்சக்கூடுகள்.
சரி அதை விடுங்கோ. விஷயத்துக்கு வருவம் உங்களுக்கு வெள்ளைக்கலரில வடிவான வெளிச்சக் கூடுகள் வேணுமெண்டா அடுத்த சனி தீபன் வீட்ட வாங்கோ.........
நாங்கள் உங்களை ஒரு இருண்ட பங்கருக்கை கூட்டிப் போவம்.
அதுக்குப் பிறகு வடிவான வெள்ளை நிற வெளிச்சக்கூடுகள் உங்களுக்குக் கிடைக்கலாம்,

(
அமௌனன் [சிறுகதை]
நன்றி: முரண்வெளி
photo: http://www4.army.mil/

0 கருத்துக்கள்: